மல்லிகை மலர்ந்து - மணம்
அள்ளி வீசிய அந்திப்பொழுது
கதிரவன் கடலில்
கரைந்து மறைந்து
என் கண் அயர்ந்து
இமை மூடியதும்
இன்பக்கனவு ஒன்று
இனிதே வந்தது
பூத்துக்குலுங்கும்
நந்தவனம் நடுவில்
சில்லென வீசிற்று
வாடைக்காற்று
என் இரு கைகள்
இறகாய் மாறின
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றில் மிதந்தேன்
கனத்த என் இதயம்
காற்றாய் பறந்து
மேக கூட்டத்தில்
மின்னலாய் பாய்ந்தேன்
புல்லினக் கூட்டத்துடன்
போட்டி போட்டு பறந்தேன்
நிலவின் ஒளியை
என் மேனியில் பூசினேன்
நட்சத்திரம் யாவும்
கையில் சேர்த்தேன்
பனித்துளிகளை
பருகி மகிழ்ந்தேன்
இனிக்க இனிக்க
இன்பக்காட்சிகள்
அனைத்தும் கண்டு
மெய் மறந்து போனேன்
சட்டென கேட்டது
வீட்டின் அழைப்பொலி
கண் விழித்து பார்த்தேன்
அப்பொழுது புரிந்து
கண்டது யாவும்
கனவாய் என்று
கடமைகள் யாவும்
நினைவிற்கு வந்தது
இன்பக்கனவு
கலைந்து போனது
- வை.அமுதா
No comments:
Post a Comment