அந்தப் பூக்களை பறிக்காதீர்கள்
பூத்திருக்கும் உரிமை அதற்கு உண்டு
அந்தக் கனியை கொய்யாதீர்கள்
காய்த்திருக்கும் உரிமை அதற்கு உண்டு
அந்த வண்ணப்பூச்சியை பிடிக்காதீர்கள்
ஆனந்தமாய் பிறக்கும் உரிமை அதற்கு உண்டு
ஊருகின்ற நத்தையை பொருக்காதீர்கள்
நகர்ந்து செல்லும் உரிமை அதற்கு உண்டு
அந்த மீனுக்கு வலை வீசாதீர்கள்
வாழும் உரிமை அதற்கு உண்டு
அந்த வானம் பாடிக்கு சிறையிடாதீர்கள்
வானில் சிறகடிக்க உரிமை அதற்கு உண்டு
அந்தக் குயிலை கூட்டில் அடைக்காதீர்கள்
இன்னிசை பாடிட உரிமை அதற்கு உண்டு
அந்த புள்ளிமானை வேட்டையாடாதீர்கள்
துள்ளி ஓடும் உரிமை அதற்கு உண்டு
எந்த உயிரினமும் உன் செயலில் தலையிடுகிறதா?
தனிமனிதன் சுதந்திரமும் வேண்டும் மானிடனே
பிற உயிர்கள் சுதந்திரத்தில் நீயும் தலையிடாதே!
- வை. அமுதா
No comments:
Post a Comment