Sunday, 25 December 2011

கதிரவன் வரவு - தமிழ் கவிதைகள்


நித்திரா தேவியின் ஆளுமையில் உலகம்
நிறைந்த மதியுடன் இருள் சூழ்ந்த வானம்
விமீன் கூட்டங்கள் சிதறிக் கிடந்தன
கீழ்வானில் பகலவன் பவனி வரத் தொடங்கினான்
இரவு தேவதை தன தேகத்தை திரையிட்டாள்
கதிரவனின் பொன்னிற ஒளிக் கீற்று
பூமோயில் எங்கும் பரவிற்று

இன்னும் சோர்வு என்னும் போர்வையில்
மூழ்கி இருக்கும் மூடர்கள் கண்டு
அவன் கொதித்து சினந்து நின்ற்நானோ
கீழ் வானம் சிவந்து கிடந்தது

ஊடல் கொண்டு பிரிந்த தலைவன்
மீண்டும் வந்து கண்டது போல்
பகலவனின் நல்வரவால்
பூமித்தாய் துயில் எழுந்தாள்

அகம் உறங்கிய புல்லினங்கள்
இறை தேடி பறந்தன
சேற்றில் முளைத்த தாமரை
முகம் மலர்ந்து விழித்தது
பல் முளைத்த குழவி போல்
குவழை சிரித்து மகிழ்ந்தது
நாடி வந்த வண்டினம்
தேனை உண்டு மகிழ்ந்தது
காணக் குயிலின் ஓசை
காத தூரம் ஒலித்தது

தாயகம் தேடி ஓடிடும்
எல்லைக் காவல் வீரன் போல்
ஏர் பிடித்து வுழவர் எலாம்
நீல நெடும் வான் தொடர்
வளைந்து தொடும் கடல் அண்டை
அதை தேடி தொட்டு வருவதற்கு
ஓடம் சென்றனர் மீனவர்

சுற்றம் பேணும் பெண்டீரோ
முற்றம் வாரி கோலமிட்டனர்
நற்றமிழ் நாடிடும் நரை முதியோர்
தேவாரம் பாடிச் சென்றனர்

கதிரவன் தேர்க்கால் சுழன்றதால்
காலச் சக்கரம் சுழன்றது
பகலவனின் நனி வரவால்
பூமியில் புத்துணர்வு பொங்கிற்று !
தம் வயல் நாடிச் சென்றனர்

No comments:

Post a Comment