மனிதனே மனிதனை தாக்கும்
வன்முறை செயல்கள் எல்லாம்
வீர விளையாட்டாகி
வெறியாட்டம் போடுது !
பாலியல் படங்களும்
பலாத்காரச் செய்திகளும்
பார்வைக்கு விருந்தாகி
வசூல் வேட்டை போடுது!
பணத்துக்கும் பதவிக்கும்
சோரம் போகும் அரசியலோ
பகட்டாக சட்டை போட்டு
பகல் வேஷம் போடுது !
கான்ட்ராக்ட்டு எடுத்து கள்ளப் பணம் சேர்த்து
பொரம் போக்கு நிலத்தை பட்டா போட்டு வித்து
கள்ள நோட்டு அடிச்சி கொள்ளை பணம் சேர்த்து
அயல் நாட்டு வங்கியிலே அள்ளிப் போடுது!
பக்தி முக்தி தியானம் -என்றே
ஆன்மிகம் பேசிடும் ஆசாமி எல்லாம்
அந்தரங்க வாழ்க்கையில் அத்து மீறுது -அது
இன்டர்நெட்டில் படமாகி சுத்தி வருகுது!
வன்முறை தூண்டும் சந்தர்ப்ப வாதம்
பண்பாட்டை குலைத்திடும் கலாச்சாரம்
இத்தனையும் தான் பாரத நாடா
இதற்கு சுதந்திரம் ஒரு கேடா !
வை. அமுதா
No comments:
Post a Comment