இருவது வயது அகவை கொண்ட
இன்பக் கனாவில் இளம் பெண் ஒருத்தி
மனதிற்கு ஏற்ற இனியவனுடன்
இன்ப இல்லறம் அடி புகுந்தாள்
நோய் என்ற பெருங்காற்றால்
கொண்டவன் பாதியில் கொள்ளை போனான்
சூறையாடி போன நிலம் போல
பாழடைந்துப் போனது அவள் வாழ்க்கை
கலை இழந்த ஓவியமானால்
சிதைந்து போன சிலையானால்
பாட மறந்த குயிலானால்
பழமை என்ற பஞ்சாங்கத்தால்
ஓளி இழந்த விளக்கானால்
அழுது புரண்டு கதறினர் பெற்றோர்
ஆதரவு தர இயலாமல் உற்றார்
செயலிழந்து நின்றது உடன் பிறப்பு
செயலிழக்க வைத்தது ஊர் நடப்பு
நாடி தளர்ந்த நரை மூதாட்டி
நங்கையை வளர்த்த அன்புப் பாட்டி
அரை நூற்றாண்டுக்கு முன்னோடி
கொண்டவனை பலிகொடுத்த இளம் கைம்பெண்
மெல்ல நடந்து அருகில் வந்தால்
அள்ளி அனைத்து உச்சி முகர்ந்தால்
கையில் உள்ள குங்குமத்தை
நெற்றியில் வைத்து வாழ்த்துச் சொன்னாள்
வாழ்க்கை உனக்கு முடியவில்லை
வாழ்ந்து காட்டு இளம்பெண்ணே
உற்றவன் இழந்தாள் நீ வெறுமை இல்லை
மீண்டும் மறுமணம் செய்திடுவோம்
பொங்கி வரும் உன் சிரிப்பில்
இந்த யுகம் பூத்துக் குலுங்கட்டும்
என்றே வாழ்த்தி உளம் குளிர்ந்தால்
எங்கும் மங்களம் பொங்கிற்று
No comments:
Post a Comment