கதிரவன் மறையும் அந்திப் பொழுது
சாலை எங்கும் ஒரே சலசலப்பு
வாகனத்தில் அமர்ந்தபடி வீதியை நோக்கினேன்
இளம் வயது மங்கை ஒருத்தி
நடு வீதியில் கிடந்தால் அசைவின்றி
அருகே ஒரு பச்சிளம் குழந்தை
பசியால் அழுது குரல் கம்மிய நிலையில்
பார்த்துப் பதறி அருகில் சென்றேன்
கேட்பாரற்று கிடக்கின்றாளே இவள்
கேள்வியை எழுப்பி கண்களை சுழற்றினேன்
செவி மடுப்பார் அங்கு யாரும் இலர்
வீரிட்டழும் குழந்தை குரல் கேட்டு
பீரிட்டு வந்தது கண்களில் கண்ணீர்
கோரிக்கையற்றுக் கிடக்கும் பலாவா இவள்
கேள்வியை எழுப்பினேன் என்னுள் நானே
பாழும் பழமும் குழந்தைக்கு அளித்தேன்
பசி அடங்கி எனை கேவியே நோக்கியது
அப்பொழுது அவள் சவமாய் கிடந்தால்
அருகில் சென்று உற்று நோக்கினேன்
நாடித்துடிப்பு இருப்பதை அறிய
நாசியின் அருகில் விரல் வைத்துப் பார்த்தேன்
அவள் மூச்சுக்காற்றின் வெப்பம் தெரிந்தது
உயிர் இருப்பது ஊர்ஜிதமானது
பின் ஏன் அவள் சவமாய் கிடக்கிறாள்?
சட்டென அருகில் பதில் வந்தது
பட்டை அடித்து படுத்திருக்கிறாள்
அதிர்ச்சியில் நான் தலை சுற்றிப்போனேன்
தாய்மை இங்கே போதையின் பாதையில்
சேயோ இங்கே நட்ட நடுவீதியில்
ஐயகோ! பண்பில் உயர்ந்த பாரத தேசமே
இதுதானா உன் எதிர்காலம்...
- வை.அமுதா
No comments:
Post a Comment