Sunday, 25 December 2011

இறைவன் செய்த பிழை - தமிழ் கவிதைகள்


உலகைப் படைத்து ஒளியைப் படைத்து
காற்றும் நீரும் படைத்த இறைவா
உயிர்களைப் படைத்து அதில் உலவ விட்டாய்
உன் உன்னத படைப்பில் குறை ஏதும் இல்லை

மென்மையான பெண்மையைப் படைத்தாய்
அவளை காக்கும் கரங்களாய்
வண்மையான ஆண்மையை படைத்தாய்
கொடியைத் தாங்கும் கோல் போல
மலரைத் தாங்கும் கிளை போல
முத்தைத் தாங்கும் சிப்பி போல
பெண்மையை ஆண்மை காத்திடும் என
தவறாக கணக்குப் போட்டுவிட்டாய்

இன்று காக்கும் கரங்கள் இருகின
பெண்மை மூச்சித் திணறி நிற்கிறது
கண்ணிருந்தும் இருட்டு உலகில் வாழ்கிறது
காப்பாற்றி கரை சேர்க்க வருவாயா

ஆண்மையை பெற்றுத் தருபவள் பெண்
ஆண்மையை அடையாளம் காட்டுபவளும் பெண்
இதை நீயும் சற்றும் உணரவில்லை
பத்து அவதாரம் எடுத்தாய் நீ
ஒருமுறைகூட பெண்ணாக இல்லை
உனக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை

உன்னிடம் இறைந்து வேண்டுகிறேன்
உன் பதினோராவது அவதாரம்
பெண்ணாக இருக்கட்டும்
மண்ணில் வந்து பிறந்த்விடு
ஆண்மை என்னும் சவாதிகாரத்தில்
அடிமைப் பட்டு வாழ்ந்து விடு
அப்பொழுது உணர்வாய் உன் பிழையை
ஆணினம் பெண்ணினம் இல்லாமல்
உயிர்களை ஓருயிராய் படைத்திடுவாய் !

No comments:

Post a Comment