பாலை வன நடுவினிலே
பயணத்தை நான் தொடர்ந்தேன்
நடந்து கால்கள் சோர்ந்தன
வறண்டு நாக்கு உலர்ந்தது
நீண்ட நெடும் பயணத்தில்
வழித்துணையாய் வந்தவர் பலர்
உறவாய் வந்தவர் பலர் பலர்
உயிராய் நின்றவர் வெகு சிலர்
ஆயிரம் உறவுகள் இருப்பினும் - என்
ஆழ்ந்த மனதின் உணர்வுகளை
பகிர்ந்து பேசி உறவாட
இள வேனில் காற்றாய் வந்தவள் நீ
ஊமை போன்ற என் கனவை
உணர்வால் நீயும் மொழி பெயர்த்தாய் - என்
மனம் காயப்பட்ட போதெல்லாம்
மயிலிறகால் அதை மருவி விட்டாய்
இருள் சூழ்ந்த நேரத்தில்
குளிர் நிலவாய் வழி காட்டி நின்றாய்
மென்மை கலந்த உன் குரலில்
தன்மையாய் எனக்கு எடுத்துரைத்தாய்
பாரதப் போர்தனிலே
பார்த்தனனுக்கு கிருஷ்ணன் போல்
பாதை மாறிப் போகாமல்
எனை நடத்தும் சாரதி நீ
குறைந்த ஆண்டே பழகினும்
நிறை மதியாய் நெஞ்சில் நிற்கின்றாய்
காலம் நம்மைப் பிரித்தாலும்
காத்திருப்பேன் மறு ஜென்மம் வரை !
No comments:
Post a Comment