Saturday, 24 December 2011

கண்ணில் மறைந்த அப்துல் கலாம்கள் - தமிழ் கவிதைகள்


கரிசல் காட்டு மேட்டுலதான் கனவு கானுரா
கட்டவிழ்ந்த அவன் மனசோ காத்தாய் பறந்தது
வெட்ட வெளி வானிலே மிதந்து சென்றது
வேற்றுலகம் எல்லா நொடியில் கடந்து வந்தது

சுட்டெரிக்கும் வெய்யில் காலை எரிக்குது
கட்டி வைத்த சுள்ளி அவன் கைய கிழிக்குது
மேட்டு காத்து புழுதியில் கனவு கலைந்தது
வீட்டு நிலைமை எல்லாம் நினைவு வந்தது

அம்மாவுக்கு வயலிலே கூலி வேல
அப்பாவுக்கு நிதம் குடிக்குற வேல
கஞ்சி கலயம் ஓரம் காஞ்சி கிடக்குது
கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இவன் காலம் நடக்குது

பொருளாதாரம் படிப்புக்கு வேலி போட்டது
பட்டப் படிப்பு எல்லா வெறுங் கனவாய் போனது
சுள்ளிக் கட்டை கையில் எடுத்தான் சின்னத் தம்பி
அவன் வீட்டு உலை இருக்குது இவன நம்பி

எதிகால பாரதம் இவன் கையிலே
இவன் எதிர்காலம் வறுமை நிலையிலே
மண்ணாகி போனது இவன் கனவெல்லாம் - இவன்
நம் கண்ணில் மறைந்த அப்துல் கலாம்

No comments:

Post a Comment