Sunday, 25 December 2011

என் அன்பு மாணவனுக்கு - தமிழ் கவிதைகள்


என் மடல் காண்பாய் என்ற நம்பிக்கை ,

எனை எழுத்து உலகிற்கு
இட்டுச்சென்ற என் இனிய மாணவன் பைசலுக்கு
இந்தக் கவிதை காணிக்கை ....

ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்திடுமாம்
அன்பான உறவுகள்
ஆயிரம் உறவுகள் எனக்குண்டு
ஆயினும் உனக்கென தனி இடம் உண்டு
அத்தனை அத்தனை உறவுகளையும்
கலந்து சேர்த்த கலவை நீ

தாயாக என்னிடம் பாசம் வைத்தாய்
தந்தையாய் எனக்கு உபதேசித்ததை
நண்பனாய் என்னை நேசித்தாய்
சேவகனாய் நிதம் தொண்டு செய்தாய்
சீடனாய் என்னிடம் விசுவாசித்தாய்
தொண்டனாய் என்னை சுவாசித்தாய்

என் சுவாச மண்டலம் இயங்கும்வரை
அதன் இயக்கமாய் நீ என்னுடன் இருப்பாய் !!!

No comments:

Post a Comment