அசுரன் ஒருவன் இருந்தானாம்
மக்களை வதைத்து வாழ்ந்தானாம்
இறைந்து மக்கள் இறைவனை வேண்டவே
கிருஷ்ணன் பூமியில் அவதரித்தானாம்
அசுரனை சூரா சம்ஹாரம் செய்தானாம்
இரக்கம் இறைவன் வடிவல்லவா
இறக்கும் தருவாயில் அவன் வேண்ட
அவன் மறைந்த நாள் தீபாவளி திருநாளாம்
அசுரனை அழித்த நாள் அதனால்
நன்மைகள் யாவும் பெருகிற்று
பூமியில் ஒளி பரவிற்று
பாட்டி சொன்ன கதை இது
பாங்காய் மனதில் பதிந்திற்று
மாந்திரீகம் என்ற பெயரில்
மக்களை எத்தி பிழைக்கும் அசுரர்கள்
மருத்துவம் என்ற பெயரில்
உயிரை வதைக்கும் அசுரர்கள்
சமத்துவம் என்ற பெயரில்
சம்பாதித்து குவிக்கும் அசுரர்கள்
சாஸ்திரம் என்ற பெயரில்
ஏய்த்து வாழும் அசுரர்கள்
இப்படி எத்தனை எத்தனை அசுரர்கள்
இன்று மக்களை வதைத்து வாழ்கின்றார்
அத்தனை அசுரர்களை அழிக்க
எத்தனை கிருஷ்ணன் வரவேண்டும்
வேண்டிப் பார்ப்போமே இறைவனிடம்
கிருஷ்ணன் மீண்டும் பிறப்பானா?
அத்தனை அசுரனையும் அழிப்பானா?
அப்படி நிச்சயம் நடந்து விட்டால்
தீமை எனும் இருள் நீங்கிடும்
நன்மை எனும் ஒளி நிறைந்திடும்
தினம் தினம் நம் வாழ்வில்
தீபாவளி தங்கிடும் !
No comments:
Post a Comment