Saturday, 24 December 2011

வாழ்த்து மடல் 2 - தமிழ் கவிதைகள்


சாந்தம் என்பதா சௌந்தர்யம் என்பதா - இல்லை
சாந்தம் என்பதே உங்கள் சொந்தம் என்பதா
எளிமை என்பதா இனிமை என்பதா - இல்லை
இவை இரண்டுமே கலந்த புதுமை என்பதா

உண்மை என்பதா உலத்திண்மை என்பதா - இல்லை
இரண்டுமே கலந்த தமிழ் தொன்மை என்பதா
மென்மை என்பதா மேன்மை என்பதா இல்லை
இரண்டும் கலந்த செம்மை என்பதா

ஓவியம் தீட்டுவதில் நீர் ரவிவர்மன்
உதவி புரிவதில் நீர் மதர் தெரேசா
அன்பில் நீர் ஓர் நீரூற்று
பண்பினில் நீர் பெரும் குணக்குன்று

அன்பு சந்தோஷம் சமாதானம் - நீர்
அனைத்து செயலிலும் நிதானம்
விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் - இவை
அனைத்தும் உம்மிடம் தான் அடக்கம்

பணியிலே பதினேழாண்டு எம்முடன் வந்தாய் - அவை
பனிபோல் கரைந்தன காலக் கதிரவனால்
நிறைந்தன நிறைந்தன பள்ளி உம் பணியால்
உறைந்தன உறைந்தன எம் உள்ளம் உம் பிரிவால்

No comments:

Post a Comment