Saturday, 24 December 2011

ஒரு பள்ளியின் அறைகூவல் - தமிழ் கவிதைகள்


ஒரு பள்ளியின் அறைகூவல்
தாய் பள்ளி அழைக்கின்றது -தன்
சேய்களை நினைக்கின்றது
ஆரம்ப அரிச்சுவடி
ஆண்டாயும் அறிவுத்திறன்
ஆளுமைப் பண்பு
ஆடல் பாடல் கலை
அத்தனையும் பெற்று
சிறகு முளைத்துப் பறந்த
அந்தச் சிறார்களை
முதிர்ந்த பறவைகளாய்
காண இன்று துடிக்கின்றது
ஆண்டு பல ஆயினும்
ஆயுள் குறையாமல்
அயர்ந்து ஓயாமல்
நரை தட்டினாலும் - தன்
நடை தளராமல் - தன்னில்
விடை பெற்றுச் சென்ற
விழுதுகளை அழைக்கின்றது
மீண்டும் ஒருமுறை - உம்
கருவறையைக் காண
வாரீர் வாரீர் வாரீர்
-வை. அமுதா

No comments:

Post a Comment