Sunday, 25 December 2011

ஆபுத்திரன் விருந்து - தமிழ் கவிதைகள்


தடபுடலான விருந்து தயாரானது வீட்டில்
அறுசுவையுடன் ஆயத்த நிலையில்
வீடு தேடி தேடிச் சென்று
அழைத்திட்டார் வீட்டார்
விருந்துண்ண வருவதற்கு
தொலைதூரம் இருந்தவருக்கு
தொலைபேசியில் அழைப்பு
தொடர்புகள் இல்லாதவர்க்கு
சேதித்தாளில் அறிவிப்பு

அரசு பணியில் இருந்தவருக்கு
விடுமுறை இல்லை என்ற சாக்கு
பொதுத்துறையில் இருந்தவருக்கு
பொறுப்பு அதிகம் என்ற சாக்கு
புதியதாய் திருமணமானோர்
பிரிந்து வர முடியவில்லை
அரிதாய் பழகி வந்தோர்க்கு
சங்கஜமான சூழ்நிலை
காலியாய் கிடந்தது விருந்து மண்டபம்
கலங்கிப் போனார் விருந்தளிப்பவர்

கனிந்து அழைத்தார் பணியாளரை
தணிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் வீதியில் செல்லும் வரியோரையும்
சாலையில் ஒதுங்கும் முதியோரையும்
பாரம் தூக்கும் கூலியையும்
பஞ்சத்தில் வாழும் பரதேசியையும்
பார்வை இல்லா ஊனரையும்
பாதையில் உறங்கும் பாமரரையும்
ஜாதி மதம் பாராமல்
வீதிதோறும் சென்று அழைத்துவா
என்றே சொல்லி அனுப்பி வைத்தார்

வறியவர் அனைவரும் வந்து குவிந்தனர்
விருந்தை உண்டு மனம் மகிழ்ந்தனர்
இன்முகத்தோடு அவர் செல்வது கண்டு
முகம் மலர்ந்து அகம் நிறைந்தது
அன்பால் விருந்து நிறைவு பெற்றது
பண்பால் அவர் ஆபுத்திரனானார்

No comments:

Post a Comment