காற்றடிக்கும் திசையில் தான்
காற்றாலை சுழல்வதுண்டு
ஊற்றெடுக்கும் இடத்தில்தான்
பசும்புல் முளைப்பதுண்டு
நாற்றுப்பயிர் நட்டால்தான்
நற்பயிர்கள் விளைவதுண்டு
உற்றக்கல்வி கற்றால்தான்
வாழ்வில் உயர்வுண்டு
ஏற்றம் மனதில் இருந்தால்தான்
ஆற்றல் மனதில் வருவதுண்டு
அன்பெனும் ஊற்று பெருக்கெடுத்து ஓடி
நலம் தரும் நாற்றங்காலில் பாய்ந்தால்
வளம் செழித்திடும் இவ்வையகம்.
- வை.அமுதா
No comments:
Post a Comment