சாயும் காலை இருள் சூழ்ந்த நேரம்
என்னை கதிகலங்க ஒரு சேதி
ஊர் சென்ற உடன்பிறப்பு விபத்துக்குள்ளானது
பதறி அவ்விடம் அடைய விரைந்தேன்
அலறிப் புலம்பிய என் தாயை தேற்றி
என் ஆட்டோவில் அவரை அழைத்து விரைந்தேன்
பாதி வழியில் தொடர்ந்தது துயரம்
சென்ற ஆட்டோ விபத்தில் கவிழ்ந்தது
தலை கீழாக குப்புற கிடந்தோம்
எழுந்து மெல்ல அசைந்து நின்றேன்
விழுந்த பதட்டம் அடங்கவில்லை
என் தாயின் நிலை கண்டு பதைத்துப் போனேன்
தலையில் காயம் எங்கும் ரத்தவெள்ளம்
என்ன செய்வது என்று அறியாது திகைத்தேன்
நாடி வந்த நல நண்பர்கள் போல்
சிலர் கூடி வந்தனர் என் அருகில்
மலர்ந்த முகத்துடன் ஆறுதல் தந்தனர்
கிளர்ந்த என் மனம் சற்று தேறியது
வளத்த நண்பர்கள் விரைந்து நடந்தனர்
அவரால் நுழைந்தேன் மருத்துவமனைக்குள்
அவசர சிகிச்சை அளிக்கப் பட்டது
கண்விழித்து நோக்கினேன் நன்றி உரைக்க
கண்பட்ட தொலைவில் எவரும் இலர்
தாயை அழைத்து வாயிலை அடைந்தேன்
மருத்துவர் வந்தார் சிகிச்சை ரசீதியுடன்
அப்பொழுதுதான் என் அறிவுக்கு எட்டியது
கைப் பேசியும் கைப் பணமும் களவு போனது
நாடி வந்த நண்பர்கள்
தேடி வந்த பொருளை எடுத்து
ஓடிப் போன மாயச் செய்தி
கோடியில் ஒரு மருத்துவர் போலும்
வேடிக்கையாய் சிரித்துவிட்டு
வேண்டாம் காசு என்றார்
மானம் பிழைத்தது மருத்துவமனையில்
வழியில் ஆபத்து வந்திடலாம்
வழிப் பரி கொள்ளையரும் வந்திடலாம்
உதவி என்ற பெயரில்
நண்பர்கள் என்ற போர்வையில்
நயந்து ஆறுதல் பேசிடுவார்
கையில் கிடைத்ததை எடுத்திடுவார்
நொடியில் கம்பி நீட்டிடுவார்
இந்த நாடி வரும் நண்பர்கள் ஜாக்கிரதை
No comments:
Post a Comment