அரும்பிய மொட்டாய் நான் அலர்ந்தபோது
விரும்பி எல்லோரும் எனை நோக்கினர்
குதிரையை விட வனப்பாய் நான் தோன்றியதால்,
என்னைப் பார்த்தால் யோகம் வரும் என்றனர்
வளர்ந்து முதிர்ச்சி அடைந்து நிற்கின்றேன்
பருத்த என் உடலையும்
விரித்த விரைத்த காதுகளையும் கண்டு
வெறுத்து ஒதுக்கினார் இன்று
நாளும் பொதி சுமக்கின்றோம்
நார்ச்சந்தியில் நடுவில் ஒதுங்குகின்றோம்
கத்தினால் கழுதையாய் கத்தாதே
மிதித்தால் கழுதை போல் உதைக்காதே
என எடுத்ததேர்க்கெல்லாம் என் பெயரை
வீதியில் இழுத்து விடுகின்றீர்
சீம்பால் அருந்தும் பச்சிளம் மதலை
சீராய் குரல் வளம் பெறுவதற்கு
என் பால் ஊட்டி மகிழ்கின்றார்
குரல் கனத்து அது கதறினாலோ
கழுதைப் போல் கத்தாதே என கடுகடுக்கின்றார்
தன்னைக் கொடுத்த தேவ மைந்தன்
மண்ணில் மகிமை உண்டாக்க
குருத்தொலைத் திருநாளில்
என்னில் ஏறி உலாச்சென்றார்
மண்ணில் மாட்ச்சிமை யாம் பெற்றோம்
இனி எம்மை எல்லி நகையாட வேண்டாம்
இழிந்த பிறவியாய் நினைத்திட வேண்டாம்
நலிந்து வாழும் மக்களுக்கு
நானே பெரிய சுமைத் தாங்கி !!
No comments:
Post a Comment