வாழ்க்கை என்பது போர்க்களம் தான்
அதில் வாழத் துடிக்கும் சிப்பாய் நான்
முன்னேறி செல்கிறேன் வெற்றி கனி நோக்கி
வாய்மூடி நடக்கும் கால்நடையாய் அல்ல
களத்தில் வெற்றி காணும் வீரத்திருமகனாய்
இறந்தகால வரலாறு எனக்கு கற்பித்த பாடம்
எதிர்கால நம்பிக்கையில் முன்னேறிச் செல்கிறேன்
நிகழ்கால நிகழ்வுகள் கவனத்தை செலுத்தி
முன்னோர்கள் விட்டுச் சென்ற காலடிச் சுவட்டில்
புரமுதுக்கிட்டோடிய கோழைகள் அங்கே
மாய்ந்துக் சடலங்களாய் கிடப்பது கண்டு
ஓய்ந்து போகவில்லை என் துடிக்கு கரங்கள்
காய்ந்து போன சருகுபோல் எதிரிகள் சாய்ந்தனர்
அயர்ந்து தூங்க முனையும் என் கண்கள்
நயந்து கூறிடும் என் மனம் வேண்டாம் என
அயராது அமராது தினம் உள்ளம் போராடும்
ஓயாது கேட்கும் வெற்றி ஒலிககாய்!
No comments:
Post a Comment