என்னுள் இருக்கும் என் மனமே
எனக்கு ஏன் அடங்க மறுக்கின்றாய்
நான் விரும்பாததை ஏன் நாடுகின்றாய்
நான் கேளாததை ஏன் தேடுகின்றாய்
மறக்க நினைத்த நினைவுகளை
மீண்டும் ஞாபகபடுதுகிறாய்
என் கண்கள் பார்க்க மறுத்தவற்றை
நினைவில் கொண்டு நிறுத்துகிறாய்
என் கைகள் மறுத்த செயல்களை
செய்ய நீயே தூண்டுகிறாய்
என் நாவு பேச மறந்தவற்றை
மீண்டும் சொல்ல விழைகின்றாய்
நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்றாய்
நினைவலையில் என்னை மூழ்கடிகின்றாய்
கண் அயர்ந்து நான் தூங்கையிலே
கனவாக வந்து எனை வாட்டுகிறாய்
நான் ஒருபுறம் அமர்ந்திருக்க
நீ மட்டும் எங்கோ செல்கின்றாய்
என் பார்வையில் பட்டது தெரியவில்லை
என் கால்கள் செல்லும் பாதை அறியவில்லை
காதில் விழும் ஒலி சிதறியதே
மனம் நிம்மதி இழந்து தவிக்கிறதே
நிஜ உலகில் நான் வாழ்வதற்கு
என்னுள் நீ அடங்கி விடு!!
No comments:
Post a Comment