விடிந்து விடியா காலை அது
விரைந்தேன் சமையல் கட்டுக்குள்
கண்ணங்கரு காக்கை ஒன்று
கதவருகே வந்து நின்றது
கழுத்தை சாய்த்து கண்ணை சுருக்கி
கா .....கா ...... என்று கரைந்தது
எஞ்சி இருந்த ரொட்டித் துண்டை
தாழ்வாரத்தில் வீசினேன்
அதை சற்றென்று கவ்வி
வானில் பறந்து மறைந்தது
மறு நாளும் வந்தது
உணவை கொத்திச் சென்றது
வேடிக்கையாய் தொடங்கியது
இன்று வாடிக்கையாய் போனது
இன்றும் அது வருகிறது
ஆனால் அது கரைவதில்லை
கனிந்த குரலில் நான் பேசுவதை
கவனிப்பது போல் எனை பார்க்கிறது
அருகிக் சென்று நான் நின்றால்
அஞ்சி பறந்து போவதில்லை
பறவை இனமே ஆனாலும்
பாசம் வைப்பதில் தவறில்லை
அன்பு என்ற ஆயுதத்தால்
ஆண்டிடலாம் அகிலத்தையே
No comments:
Post a Comment