நெஞ்சில் வீர கனல் கொண்டு
புதுமை என்னும் வாள் ஏந்தி
மனம் என்னும் குதிரை ஏறி
புறப்பட்டனே நெடும் பயணம்
கண்ணில் பட்ட கயமைகளை
வெட்டி சாய்த்தேன் பூண்டோடு
பெண்மையை வதைக்கும் பேய்களை
விரட்டி அடித்கேன் சாட்டையினால்
சாதிக் கொடுமை முற்புதரை
சுட்டெரித்தேன் பார்வையினால்
ஊரை ஏய்க்கும் விஷச் செடியை
தூரெடுத்து வேலி இட்டேன்
பழமை காய்ந்த சருகுகளை
புதுமைப் புயலால் விரட்டி விட்டேன்
பாதி தூரம் கடந்து விட்டேன்
நெஞ்சில் வீரம் குறையவில்லை
பயணத்தில் சோர்வும் தோன்றவில்லை
மீதி தூரம் தொடருகின்றேன்
மண்ணில் தோன்றும் விடியலுக்காய் !
No comments:
Post a Comment