கண்கள் பார்த்து பேசவில்லை
காத்திருந்தும் நோகவில்லை
கண்ணுக்கெட்டா தொலைவில்
நீ இருந்தாலும்
களி உவகை கொண்டது
என் மனம் உன் நட்பால்
என் கருத்துக்கு விருந்தானது
உன் உரையாடல்
எத்தனையோ ஆண்டுகாலம்
காத்திருந்த விதை
கால ஓட்டத்தில்
கடத்தி சென்று
நன்னீரின் அருகினிலே
விழுந்து முளைத்தது போல்
இன்று நீ செய்த அகழ்வாராட்சியில்
பெயர்த்தெடுத்தாய் உண்மைகளை
மெய்யாகவே சொல்கின்றேன்
மெய் மறந்து சொல்கின்றேன்
கதிரியக்கம் போல் தாக்கியது
உன் பரிசமான வார்த்தைகள்
காற்றில் சுமந்து வந்த உன் வாசகம்
கருத்தைக் கவரும் திருவாசகம்
காயப்பட்ட உள்ளம் தான்
கருத்தில் பட்டதை சொல்கின்றேன்
காதல் என்பது கருதொருமிப்பது
கருத்தொத்த காதலுக்கு வயதில்லை !
No comments:
Post a Comment