Saturday, 24 December 2011

நினைவில் நின்ற அவலம் - தமிழ் கவிதைகள்


அயர்ந்து அமர்ந்து இமைமூடி
என் நினைவுகளை கட்டவிழ்த்தேன்
மடை திறந்து வெள்ளம் போல்
கடந்து ஓடின நிகழ்வலைகள்
வேகத்தடை இல்லாததால்
நினைவுகள் யாவும் சிதறியான
துணிந்து சற்று தடைபோட்டேன்
துள்ளி வந்தது ஒரு நினைவு

அன்று ஈகை திருநாளுக்கு முந்தைய நாள்
நம்மால் இயன்றதை நாம் கொடுப்போம்
என எண்ணி ஏகினேன் பள்ளி வாசலுக்கு
வறியவர் பலர் வாசலில் நிறைந்தனர்
கையில் எடுத்து காசுகளை
கண் முன்னில் நின்றவர்க்கு ஈந்தேன்
கனப்பொழுதில் சூழ்ந்தது கூட்டம்
அவர் முகத்தில் நிறைந்திருந்தது வாட்டம்
கொடுத்து என்னால் முடியவில்லை
கொடுக்கவும் என்னை யாரும் விடவில்லை
வழிபறித்து ஓடும் கள்வர்கள் போல்
கையில் இருப்பதை கவர்ந்து கொண்டனர்

கண்கள் கண்ணீரில் குலமாயிற்று
மனமோ பெரும் கனமாயிற்று
கையில் இருந்ததை பறித்ததற்கு அன்று
பசியால் பரிதவிக்கும் கூட்டம் கண்டு

No comments:

Post a Comment