ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
உண்மை அறியா மூடர்களே
பக்தி என்ற வேடம் தரித்து
பாதை மாறிப் போனவரே
திசை மாறி சற்று சிந்தியுங்கள்
அவள் படைத்த உயிர்கள் பசித்திருக்க
அம்மன் கேட்டாளா அபிஷேகம்
ஆயிரம் அனாதைகள்
ஆடை இன்றி இருக்க
அம்மன் கேட்டாளா
வண்ண பட்டாடை
அகிலத்தையே ஆட்சி செயும்
அகிலாண்டேஸ்வரி
அவளையே சிலையாக்கி
அலங்கரித்தீர் பட்டாலே - நீங்கள்
சாமிக்கே வேஷம் போடும் ஆசாமிகள் !
No comments:
Post a Comment