Saturday, 24 December 2011

என் உயிர் தோழிக்கு (௨)......... - தமிழ் கவிதைகள்


நட்ட நாடு காட்டினிலே - இருளில்
கண்ணைக் கட்டி விட்டதுபோல்
திக்கு திசை தெரியாமல்
திகைத்து நான் நிற்கையிலே
வலி காட்டும் குளிர் நிலவாய்
வந்தே நீ சேர்ந்தாய் !

வெட்ட வெளி பாலை வனத்தில்
சுட்டெரிக்கும் மணல் மேட்டில்
நால் திசையும் சூனியமாய் - நான்
அடி சோர்ந்து நிற்கையிலே
பாலைவனச் சோலையாக
வந்தே என் துயர் துடைத்தாய் !

அலை கடல் மீதே நீ இருந்தாலும்
ஆழ்கடல் உள்ளே நீ சென்றாலும்
மலை உச்சியின் மேல் நீ நின்றாலும்
பசும் புல் வெளியில் நீ நடந்தாலும் - உன்
பல மைல் கடந்து நீ சேர்ந்தாலும்
இதயத் துடிப்பை நான் உணர்வேன் !

No comments:

Post a Comment