Sunday, 25 December 2011

கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா! - தமிழ் கவிதைகள்


காட்டு வழியே செல்கின்ற
குருட்டுப் பிச்சைக் காரன் நான்
இடர்களுக்கு நடுவே செல்கிறேன்
பாதகம் இல்லாமல் நான் கடக்க
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா!

ஜாதி என்னும் சதுப்பு நில முதலை
என் காலைக் கவ்விச் சென்றுவிடும்
மதம் என்னும் மலைப் பாம்பு
எனை விழுங்கி தின்ன வந்திடும்
இந்த சாகடிக்கும் ஜந்த்துக்களிடம் சிக்காமல்
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

அரசியல் புயல் என்னை தாக்கிடலாம்
அஞ்ஞானம் எனும் வெள்ளம் அடித்திடலாம்
வழிப்பறி காவலரிடம் நான் கொள்ளை போகலாம்
தொழில்றீதிக் கள்வர்கள் எனைக் கவவர்ந்திடலாம்
இந்த கோர விபத்திலிருந்து காப்பாற்ற
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

லஞ்ச ரத்தக் காட்டேரிகள்
கறுப்புப் பண இடுகாட்டுப் பேய்கள்
பதவி வெறி பிடித்த ஓநாய்கள்
ஊரை ஏய்க்கும் குள்ளநரிகள்
வந்து என்னைத் தீண்டிடாமல்
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

No comments:

Post a Comment