Saturday, 24 December 2011

ஜகத்தை அழித்துவிடு - தமிழ் கவிதைகள்


உலகைப் படைத்து ஒளியைப் படைத்து
இயற்கை யாவும் படைத்த இறைவா
மனிதனைப் படைத்து மகிழ்ந்தாயே
பின் பசியைக் கொடுத்து ஏன் தவிக்க விட்டாய் ?
பாழும் மனிதன் உன்னை மறந்திடுவான்
என்ற அச்சம் உன்னை சுற்றியதோ?
கருணையின் எல்லை கடவுள் அல்லவா!
உன் கருத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்
நீ இருக்கும் இடம் நான் அறியவில்லை
இல்லையேல் உன்னை தேடி அங்கு வந்திருப்பேன்
வரம் வாங்கி நான் வாழ்வதற்கு அல்ல
கரம் பிடித்து உன்னை பூமிக்கு அழைத்துவர
உன் கருணைப் பார்வையில் பாரபட்சமா?
ஒரு புறம் மக்கள் உல்லாச வாழ்வில்
மறு புறம் மக்கள் வறுமையின் வாசலில்
நீதியின் தலைவன் நீ என்றால்
ஒன்று பசி எனும் பிணியை நீக்கிவிடு
இல்லையேல் ஜகத்தை அழித்துவிடு !

No comments:

Post a Comment