கைபேசிக்காதல்
கந்தர்வக்காதல்
காவியக்காதல்
காணாத காதல்
கடிதக்காதல்
சினிமா காதல்
சீசன் காதல்
ஏட்டுக்காதல்
எதிர்வீட்டுக்காதல்
ஜன்னல் வழிக்காதல்
சாலையோரக்காதல்
கடற்கரைக்காதல்
கல்லூரிக்காதல்
இன்டர்நெட் காதல்
ஈமெயில் காதல்
எல்லாம் கடந்து
புதிதாய் வந்தது - கைபேசிக்காதல்
கண்டு காதலுற்று
கண்களால் பேசி
காலம் கடந்தும்
காத்திருக்கும் காதல்
கண்களால் காணாமல்
காத்திருந்தும் சோராமல்
காதுகளுக்கு விருந்து
கைபேசிக்காதல்
யுவதி ஒருத்தி வீதியில் நின்று
தானாக பேசி தனியாகச்சிரித்தால்
தவறாக நினைக்காதீர் பைத்தியம் அவள் என்று
வாலிபன் நட்டநடு வீதியில்
சாலை நெரிசல் ஓட்டத்தில்
சற்றும் தயங்காமல் சளைக்காமல் பேசினால் கண்டுகொள்வீர் இது கைபேசிக்காதல் என்று
உணர்வுகளை அடகுவைத்து
உண்மைகளை உறங்கவைத்து
உதடுகளால் உறவாடும்
உயிரிழந்த காதல் இது
உயர்ந்து வரும் விஞ்ஞானத்தால்
உலர்ந்து வரும் கலாச்சாரம்
வளர்ந்து வரும் சமுதாய வைரஸ்
மலர்ந்து வரும் கைபேசிக்காதல்!
No comments:
Post a Comment