குள்ள நரிக் கூட்டம் ஒன்னு
ஊருக்குள்ளே வருகுது
கூடி சேர்ந்து கும்மியடிச்சு
கொள்ளையடிக்க பாக்குது
அடுத்தவ நிலத்தமடக்கி விக்குது
ஏமாந்தா பாக்கெட்ட அபேஸ் பண்ணுது
அந்த வேல இந்த வேல அரசாங்க வேல
என ஆச காட்டி மோசம் பண்ணும் அரசியல் நரி
தன் காலம் போற வலி தெரியாமலே - நம்
எதிர்காலம் சொல்லும் ஜோசிய நரி
செவ்வா தோஷம் சர்ப்ப தோஷம் பேசியே - தன்
ஜலதோஷத்திற்கு வலி தெரியா ஜாதக நரி
பில்லி சூனியம் மந்திரம் சொல்லி -நீ
ஏமாந்தா நேரம் அமுக்கும் மாந்திர நரி
அரிசி முதல் உயிர் காக்கும் மருந்து வரை
கலப்படத்தால் காசு சேர்க்கும் வியாபார நரி
வாயக் கட்டி வயித்த கட்டி பணம் கட்டினா
அது அப்படியே கல்த்தா கொடுக்கும் சீட்டு நரி
இத்தன நரியும் ஊருக்குள்ள இருக்குதுங்க
நோட்டம் பண்ணி கூட்டம் சேர்க்கப் பாக்குது
இந்த நாசக் கார நரிக் கூட்டத்த நம்பிடாதிங்க
இருக்கிறதையும் கொடுத்துட்டு தெருவில் நின்னுடாதிங்க
No comments:
Post a Comment