Saturday, 24 December 2011

ஈசல் தந்த வாழ்கை பாடம் - தமிழ் கவிதைகள்


மாலை மங்கி பகலவன் கடல் சேர்ந்ததும்
மழை மேகம் கூடி பூமி இருள் சூழ்ந்தது
அறையின் மின் விளக்கை சுடரவிட்டேன்
அங்கு வந்து சேர்ந்தன ஈசல் கூட்டம்

விளக்கை சுற்றி சுற்றி பறந்தன
வீடெங்கும் அதன் அட்டகாசம் நிறைந்தன
ஆயுள் அதற்க்கு மெல்ல குறைந்தன
சிறகுகள் இழந்து விரைவில் இறந்தன

வாழ்க்கை என்பது பிறப்பும் இறப்பும்
வாழும் வரையில் தீண்டாது உன்னை இறப்பு
தற்கொலை செய்தால் அது உன் கொழுப்பு
மறைந்ததும் தெரியாது ஏதும் உனக்கு

வாழும் வரையில் ஈசலாய் வாழ்ந்திடு
வரும் துன்பம் யாவையும் துச்சமாய் மதித்திடு
அச்சம் என்பதை அறவே போக்கிடு
அணைத்து உயிரிடத்தும் அன்பு செலுத்திடு!!

No comments:

Post a Comment