தேர்தல் திருவிழா முடிஞ்சிதுங்க
தெருவெல்லாம் தோரணம் மரஞ்சிதுங்க
சுவரொட்டி எல்லா கிழிச்சாச்சி
ஓட்டுச் சாவடியும் ஓஞ்சி போயிடிச்சி
வேட்பாளர் தேடிய வாக்கெல்லாம்
வாக்காளர் முடிவுல விழுந்தாச்சி
பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண் போல
தேர்தல் ரிசல்ட்டுக்கு காத்திருந்தார் வேட்பாளர்
வெற்றி பெற்றவர் முகத்தில் புன் சிரிப்பு
அவர் வீதியில் வாகன அணிவகுப்பு
பள பளவென மக்கள் வேட்டி கட்டி
வாசலில் நிறைந்திட்டார் லைன் கட்டி
சாக்கடை ஓடும் தெரு ஓரம்
நடு வீதியில் எங்கும் குண்டு குழி
குடிநீர் குழாய் பற்றா குறை
சுகாதார சீர்கேடு மலிந்த நிலை
வேட்டைக்கு வந்த வேட்பாளர்
வேகத்தில் தந்திட்டார் வாக்குகளை
பிரச்சனைகள் யாவும் கேட்கப்படும்
ஒரு நொடியில் யாவும் தீர்க்கப்படும்
நம்பி கொடுத்தனர் தங்கள் வாக்குகளை
வெம்பிப்போன இவர் பேச்சை நம்பி
விடிவுக்குக் காத்திருந்த மக்கள் நிலை
இலவு காத்த கிளி போலாச்சி
வெற்றி திருமகன் வீதி உலா வந்தார்
தெரு தெருவாக கணக்கெடுத்தார்
நலத்திட்டத்திற்கு கணக்கு போட அல்ல
அடுத்த தேர்தலுக்கு காண்ட்ராக்ட்ல கணக்கு பண்ண
No comments:
Post a Comment