கண்ணிரெண்டில் நீ இருப்பதால்
என் கண்ணீரும் தித்திக்குதடி
உன் சுவாசக்காற்று எனை தழுவுவதால்
வந்து போகும் உன் நினைவுகள் அடிக்கடி
எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்து
நீ ஏன் தூக்கு தண்டனை கைதியானாய்
வாழ்க்கை என்பது ஒரு முறைதான்
காலம் புகட்டும் பாடம் இது
காத்திருக்கிறேன் தண்டனை காலம் வரை
வாழ்ந்திருக்கிறேன் உன் நினைவுகளால்!
No comments:
Post a Comment