Sunday, 25 December 2011

வள்ளுவன் செய்த பிழை - தமிழ் கவிதைகள்


கணவனை தொழுபவள் கண்ணகியாம்
இயற்கைக் கூட இசைந்திடுமாம்
விண்ணை அவள் ஆணை இட்டால்
பெய்யென மழை பெய்திடுமாம்
வள்ளுவன் சொன்னக் கூற்று இது
வாழையடி வாழையாய் விளங்கிற்று
கற்பின் இலக்கணம் இது தானா?
என் கருத்து இதை ஏற்கவில்லை

உள்ளத்தால் உணர்வுகளால்
ஒருவனுக்கு அடிமைப் பட்டு
கண்மூடித்தனமாய் அவனை வழிபட்டு
தனித்துவம் ஏதும் இல்லாமல்
தன் உள்ளத்தை உறங்கவைத்து
அதன் உணர்வுகளை மூழ்கடித்து
ஆயுள் தண்டனை கைதிபோல்
காலம் தள்ளும் பெண்ணினம்தான்
கற்ப்பில் சிறந்த கணிகையா?

ஆண் பாதி பெண் பாதி
ஆனது இந்த மனித இனம்
பெண் கற்பின் இலக்கணம் கூறும்
காலத்தை வென்ற வள்ளுவமே
ஆணின் கற்பிற்கு இலக்கணம்
ஏன் தர மறந்துவிட்டாய் ?

No comments:

Post a Comment