Saturday, 24 December 2011

அருள் புரிவாய் இறைவா - தமிழ் கவிதைகள்


இயற்கை எழிலரசி நீலகிரி
அருகினில் சில்லென சிற்றருவி
நறுமணப் பூங்காவனம் அதைத் தழுவி
கிடைத்திட இறைவா அருள்புரி

கொத்துக் கொத்தாய் மலர் பந்து
வண்டுகள் மொய்த்திடும் அவ்விடம் வந்து
மோதிடும் காற்று மூங்கிலிலே
குழலோசை எழுந்திடும் அவ்வேளையிலே

மாலை மங்கிடும் நேரத்தில்
பல பறவைகள் தங்கிடும் கானகத்தில்
அவை இன்னிசை பொழிந்திடும் கானத்தில்
இறைமை நிறைந்திடும் அந்நேரத்தில்

பத்துப் பதினைந்து மழலைகளுடன்
நானும் தளர் நடை பயின்று
சுற்றித் திறந்திட வேண்டும் எனை மறந்து
இறைவா அதற்கு அருள் புரிவாய்

No comments:

Post a Comment