தத்தை மொழி பேசி
கொஞ்சும் விழி காட்டி
பிஞ்சு விரல் நீட்டி - என்
இச்சை குளிர வைப்பாள்
அவள் பிஞ்சு அடி நடக்கையிலே
சிற்றடி நஞ்சிடும்என அஞ்சி
பஞ்சு மெத்தை விரித்திடுவேன்
மிஞ்சும் என் பாசத்தால் !
பொய்மை என்பதை அவள் அறியாள்
மென்மையாக தோன்றினாலும்
வண்மை கொண்ட உளம் உடையாள்
நளினம் அவளிடம் நாட்டியம் பயிலும்
எனை பரிந்து பேசுவதில் சகோதரியாய்
எனை புரிந்து பேசுவதில் தோழியாய்
எனை அறிந்து கொள்வதில் ஆசானாய்
இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கின்றாள்
நிமிர்ந்து அவளைப் பார்க்கையிலே
என் உள்ளம் பூரிப்படைகிறது
அவள் நகைத்து என்னிடம் பேசுகையில்
என் நினைவுகள் செயல் இழக்கிறது
பருவ மங்கையே ஆனாலும்
பாசம் வைப்பதில் அவள் என் தாய்
அகவை இருபதே ஆனாலும்
குழந்தையாய் எனக்கே தோன்றுகிறாள் !
No comments:
Post a Comment