Sunday, 25 December 2011

சோரம் போன மனித நேயம் - தமிழ் கவிதைகள்


பூமி கொதித்து சினந்தது
அதன் மேலோடு சற்றே தளர்ந்தது
எங்கும் பட படவென அதிர்ந்தது
கண்ணாடியாய் விரிசல் பட்டு விரிந்தது
பல உயிர்கள் போல பொலவென சரிந்தது

எங்கும் கேட்டது இடை படா மனித ஓலம்
இதயத்தை உருக்கும் மரண ஓலம்
வாடி உதிர்ந்து விழுந்த மலர் போல
வீதியில் சிதைந்து கிடந்தது மனித உடல்

காலின்றி கையின்றி கவனிப்பாரின்றி
காப்பாற்ற ஆளின்றி கதறி அழ தெம்பின்றி
இடுக்குகளில் அடைப்பட்டு
மரணப் பிடியில் இறுக்க்கப் பட்டு
எழுப்பும் ஈனக்குரல்கள் எங்கும் நிரம்பிற்று

மீட்ப்புக் குழுக்கள் ஒருபுறம் விரைய
காக்கும் கரங்கள் ஒரு புறம் நிறைய
கருணை உள்ளங்கள் ஒரு புறம் வளைய
அன்பு உயிர்களை இழந்தவர் விம்மி
மீட்க்கும் உடலுக்காய் காத்து நின்றனர்

நாய்களும் நரிகளும் வலம் வந்தன
எஞ்சிய பிணங்களை கொத்தி உண்ண
காத்திருந்த கழுகுகள் போல்
அங்கு கூடி வந்த மனம் கொத்தி மனிதர்கள்
தேடினர் இடர்களின் இடை இடையே
கருணையில் உயிர்களை காப்பதற்கு அன்று
வாஞ்சையில் அவர் தம் உடமையை கவர்வதற்கு
பாத்திருந்த காவல் தெய்வங்களோ
காத்திருந்து களவுக்கு துணை போயின

மண்ணில் மனித உயிர்கள் சாய்ந்து கிடக்க
விண்ணில் ஊர்தியில் பறந்து
பார்வை இட்ட அதிகாரம்
கண்ணில் பட்ட அவலங்களை
படம் எடுத்த மீடியா
எண்ணில் அடங்கா பிரதிகளை
விற்று தீர்த்தது செய்திகள்

உள்ளம் உருகி ஊனை உருக்கி
உலகை உலுக்கிய பூகம்பம்
கல்லினும் கடின உளம் கொண்டோர்க்கு
களைகட்டிய வியாபாரம்
அன்பை போதித்த புத்த மதம்
ஆன்மிகம் போதித்த் இந்துத்துவம்
பிறந்து வளர்ந்த பாரதத்தில்
சோரம் போனது மனித நேயம்

No comments:

Post a Comment