Saturday, 24 December 2011

வேண்டாம் சாமி இன்னொரு பிறப்பு - தமிழ் கவிதைகள்


சின்ன கவுன் போட்டு
சிலுக்கு ரிப்பன் கட்டி
ஒய்யாரமா நானும்
ஓடி ஆடி திரிஞ்சேன்

ஈரேழு ஆண்டு ஆயிருச்சு -எனக்கு
ஏழரை ஆண்டு சனி பொறந்துருச்சு
பாவாடை கட்டி திரிஞ்ச என்ன
மேலாடை கட்டி போத்தி விட்டாச்சி
பள்ளிக்கூட படிப்பு பாழா போச்சு
வெள்ளி முளைக்கும் வரை வேலை ஆச்சு
ஈரெட்டு வயசுதா வந்து சேர்ந்துச்சு
யாருக்கோ கழுத்த நீட்டியாசுச்சு
ஆடு மாடு கழுவி தொழுவம் கட்டி
வீடு வாசல் எல்லாம் பெருக்கி கூட்டி
அரப்பறுத்து வந்து பயிரும் அவிச்சி
நெல்லுக்குத்தி நிதம் கஞ்சி காச்சி
ஓயாம ஓயாம நாளும் வேல செஞ்சி
ஒடம்பு த்தேஞ்சிதா ஓடாப் போச்சி
குழந்த குட்டி நாலஞ்சி பெத்தே
இழந்து போச்சு உடலுந்தா சத்து
காலேமெல்லாம் இப்படியே கழிஞ்சி போச்சு
சொந்தங்கள் எல்லாம் எனக்கு மறந்தே போச்சு
காலை முதல் மாலை வரை உயிரைக் கொடுத்து
மாலை முதல் காலை வரை உடம்பை கொடுத்து
மரத்துப் போச்சு என் உடம்பும் உணர்வுந்தா
மாறப் போவதில்லை எனக்கு வாழ்வு இனியும்தா
பொண்ணப் பொறந்ததுக்கு இத்தனை கொடுமையா
மண்ணாப் போறவரைக்கும் தொடரும் சுமையா
தேடவில்லை நானு எனக்கு சொர்க்க வாழ்வுதா
வேண்டாம் சாமி எனக்கு இன்னொரு பொறப்புதா!

No comments:

Post a Comment