சென்னையில் சுனாமி என்று
செய்தியில் அறிந்தேன் யான்-அதை
நேரில் காண வென்று
எனக்கும் ஆசை உண்டு
இன்று பள்ளி புறப்படும் முன்
ஒரு சேதி வந்து சேர்ந்தது
எம் பள்ளியே சுனாமியில் மூழ்கிற்றென்று
கேட்டு அதிர்ந்து போனேன்
பதறி ஓடி வந்தேன்- ஆனால்
திகைத்து சிலையாக நின்றேன்
மாணவர் அன்பு சுனாமி கண்டு
இப் பள்ளி என்னும் ௬௯ வருட ஆலமரத்தில் -யான்
தஞ்சம் புகுந்து ௨௦ ஆண்டுகள்
நடந்து வந்த சுவடுகளில்
கடந்து வந்த நிகழ்வுகளை
நினைத்து நான் பார்க்கையிலே
திகைத்து போகிறது என் நெஞ்சம்
என்னை நேசித்த இதையங்கள் பல
நெஞ்சில் வந்து வந்து
தன பிஞ்சு முகம் காட்டி
என் சிந்தனை ஓட்டத்தை சிதறடித்தன
என்ன பேசுவது எதை பேசுவது
அறியாது திக்கு முக்காடுகிறேன்
இவர் அன்பு அலை கண்டு
அள்ளி நான் தரவில்லை
இவர் அன்பிற்கு நிகர் இல்லை
பெற்ற தாயையே பிள்ளை மறப்பதுண்டு
கற்றுத் தந்த தாயை மறவாமை கண்டு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
என்ற வள்ளுவன் கூற்று நினைவுக்கு வந்தது
நற்றமிழ் நாவலர் பலர்
நாடி வந்த தமிழ்ச் சபை போல்
கலைக் கட்டி காட்சி தரும்
இவ் விழுதுகளின் தேடல் விழா
இனி பூகம்பமே வந்தாலும் -இந்த
ஆலமரம் நிற்கும் இடம் அதிராது அசையாது
அன்பு என்ற ஆணி வேராய்
இவர் தாங்கி நிற்கையிலே
No comments:
Post a Comment