தளர் நடை நடந்தாலும்
தளராத நெஞ்சுறுதி
சொல்லுறுதி செயலுறுதி
தவறாத வாக்குறுதி
தோற்றத்திலே எளிமை
பேச்சிலே இனிமை
ராமாயணம் அவர் உயிர் மூச்சு
கல்லையும் கனிய வைக்கும் அவர் பேச்சு
புதிர்கள் பல சொல்லியே
சிந்திக்க எமை வைத்திடுவார்
கதைகள் பல சொல்லி
நல் கருத்தை புகித்திடுவார்
ஓரிரு வார்த்தைகள் பேசிடுவார்
ஓயாமல் உழைத்திடுவார்
காடு மேடு பாராமல்
கால் கடுக்க நடந்திடுவார்
வறுமை வாழ்வை தொட்டபோது
பொறுமை காத்து சோராமல்
கடுமை சற்றும் பாராமல்
கொடுத்திட்டார் கல்வி தனை
அவர் விதைத்த உழைப்பே முளையாகி
தாங்கி நின்று கிளை விட்டு
ஓங்கி வளர்ந்து நிற்கிறது
இளைப்பாறுகிறேன் அதன் நிழலில் நான் .
No comments:
Post a Comment