Saturday, 24 December 2011

வாழ்த்து மடல் 3 - தமிழ் கவிதைகள்


ஆற்றல் அரசே! அடலேறே!
அணைத்து மக்களின் சுடர் விளக்கே!
அவர்தம் மனம் கவர்ந்த ஒளி விளக்கே
பகுதி மக்களின் குல விளக்கே!
தொண்டு செய்வதில் தூங்கா விளக்கே - மக்கள்
குறைகளை கண்டு கொள்வதில் மணிவிளக்கே!
தொண்டர் மனதில் அணையா விளக்கே!
அவர் துயர் துடைப்பதில் என்றும் திருவிளக்கே!
எம் மன்றம் வந்த கல்வி சுடர் விளக்கே!
எம் மனதில் நீங்கா கலங்கரை விளக்கே!

மக்கள் அழைத்த குரலுக்கு சேவகனாய்
பேசி பழகிட நல் சினேகிதனாய்
அரவணைப்பதில் எம் அம்மையாய்
அள்ளித்தருவதில் ஆபுத்திரனாய்
அரசியல் நாகரீகத்தில் அண்ணாவாய்
ஆதரிப்பதில் புரட்சித்தலைவராய்
பேச்சில் தெளிந்த நீரோடையாய் - மக்கள்
மூச்சில் கலந்த உயிர் காற்றாய்
எத்தனை எத்தனை பரிணாமங்கள்
உன்னிடம் கண்டு வியந்தோம் யாம்!

கலிங்கம் வென்ற அசோகன் போல்
பாதை யாவும் சீரமைத்து
நடை பாதை ஓரம் மரம் வைத்து
சமூகக் கூடம் பல நிறுவி
மாணவர் கட்டணம் நீ செலுத்தி
சாலை நெரிசல் நீக்கிடவே
மேம்பாலமும் நீ அமைத்து
பகுதி மக்கள் மனதினிலே
நீங்கா இடம் பிடித்துவிட்டாய்!

முகவுரை உமக்கு தேவையில்லை
முடிவுரை என்பது உமக்கு இல்லை - என்
வாழ்த்துரையில் ஏதும் பொய் இல்லை - உம்மை
முடிசூடா மன்னன் என்றால் அது மிகை இல்லை!

No comments:

Post a Comment