காடு மலை அலைந்து
தேடி திரிந்தாலும்
ஆழ் கடலில் மூழ்கி
முத்தே எடுத்தாலும்
கிடைக்காத நல் முத்து - எனக்கு
நீயே பெரும் சொத்து
வாடிய பயிர்
துயர் தீர்க்க
நாடியே வந்த
நல் நீர் ஊற்று - எனை
தேடியே வந்த
குளிர்காற்று
அன்பால் எனை பூட்டியது - உன்
இதயக்கதவு!
வேண்டாம் வேண்டாம் - எனக்கு
இனி வேறு உறவு!
- வை.அமுதா
No comments:
Post a Comment