நான் கண்ட நல் முத்து - நீர்
எமக்கு பெரும் சொத்து
தேவகி என்ற பெயரெடுத்து
தமிழ்க் கல்வி சாற்றியதே பெரும்பாட்டு
மூவேழாண்டாய் ஆற்றினீர் கல்விப்பணி
முழு மூச்சாய் செய்திட்டீர் கலைப்பணி
சுறுசுறுப்பு உழைப்பே உன் பாணி
சுருங்காதே மணம் கொண்ட தமிழ்வேணி
பாடம் நடத்துவதில் ஒரு தனிப்பாணி
பழகுவதர்க்கோ நீர் ஒரு ஞானி - இனி
காண்போமோ காண்போமோ இந்த இளவேனில் - என
ஏங்குமே என் மனம் இனி
கவி எழுத எமைத் தூண்டிய எழுத்தாணி - நீர்
பல மாணவரைக் கரை சேர்த்த தமிழ்த்தோணி - எம்
உளம் கவந்த இன்பத் தேனீ - இனி
மறவோம் மறவோம் யாம் தங்கள் பணி
No comments:
Post a Comment