Saturday, 24 December 2011

வாழத்தெரிந்துகொள் மானிடனே - தமிழ் கவிதைகள்


படைத்தவன் பூமியை யாவருக்கும்
பொது உடைமையாகத்தான் படைத்தான்
சுயநலத்தின் பிரதிநிதியான மானிடனோ
பூமியை தனி உடைமை ஆக்கிவிட்டான்
பகுத்தறிவு இறைவன் தந்ததனால்
அனைத்தையும் பகுக்க தொடங்கிவிட்டான்
தாம் வாழும் பூமியில் வேலியிட்டான்
தானும் வாழாமல் அதற்க்கு காவலிட்டான்

சேர்ப்பது பிரிப்பது காப்பது
என முத்தொழிலில் தன்னை மூழ்கடித்தான்
கால தேவன் கணக்கு தெரியாமல்
வாழும் காலத்தை வீணடித்தான்

மண்ணில் விழுந்த நல் விதையோ
மரமாய் பிறர்க்கு நிழல் தந்திற்று
சிற்ப்பியில் விழுந்த மழை துளியோ
நல்முத்தாக விளைந்திற்று
மலையில் பிறந்த சிற்றருவி
பூமிக்கு நீரூற்றாயிற்று

மண்ணில் பிறந்த மானிடனோ
ஓரடி உருவாய் பிறந்து
போராடி போராடி வளர்ந்து
தளர்ந்து தள்ளாடி உலர்ந்து
ஒரு பிடி சாம்பலாய் குறைந்து
சுவடுகள் தெரியாமல் மறைகின்றான்

பிறப்பவர் இறப்பது நிச்சயமே
நிலைத்து நிர்ப்பது சத்தியமே
இயன்ற வரை பிறர்க்கே வாழ்ந்து விடு
முடிந்தவரை பகிர்ந்து கொடுத்து விடு
அன்பென்னும் முகட்டை தொட்டுவிடு
நாளை கல்லறை சொல்லும்
உன் வாழ்க்கை சுவடு

No comments:

Post a Comment