தத்தித் தத்தித் தவழ்ந்து வரும்
தங்க நிலவே - உன்
தங்க நிற மேனிக்கு
யார் மெருகு சேர்ந்ததோ?
கை தவறி வானில் விட்ட
தங்கத் தட்டு
பல கவிஞர்களுக்கு
நீயே கற்பனை ஊற்று
காலும் இல்லை கையும் இல்லை
மெல்லத் தவழ்கிறாய்
மேகம் விட்டு மேகம் மறைந்து
உனைத் தேட விடுகிறாய்
இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டை
நீ எங்கு கற்றையோ
காதலுற்ற மேக வண்ணன்
உன் கன்னம் கடித்தனோ
நாணமுற்ற நீயும்
மேகம் மறைந்தையோ
கட்டிளங் காளையர்க்கு
காதலி நீயே
காதலுற்ற மங்கையர்க்கு
தூதுவன் நீயே
எட்டி எட்டிச் சென்றாலும்
என்னிடம் வருகிறாய்
எங்கே நான் போனாலும்
பின் தொடர்கிறாய்
விட்டுச் செல்ல மனமில்லை
உடன் வருகிறேன்
உற்ற துணையாக வருவாய்
என் உயித்தோழியாய்
kavithai romba alaga ullathu...............
ReplyDelete