இருக்க மூடிய
உன் இதயக் கதவுகள்
உள்ளே இருந்தன
நான்கு அறைகள்
தேடிப்பார்த்தேன்
திறவுகோலை
உள்ளே இருப்பது
யாரென்று அறிய
கண்பட்ட திசையெங்கும்
தென்படவில்லை
சன்னக்குரலில்
மெல்ல சொன்னேன்
வந்திருப்பது
நான் தான் என்று
கண்ணிமைக்கும் நேரத்தில்
கதவுகள் திறந்தன
கண்டேன் அங்கு
என்னை நானே!
- வை.அமுதா
No comments:
Post a Comment