மனைவி :
காடு வெட்டி களை எடுத்து
நாற்று நட்டு தண்ணி பாச்சி
அரப்பருத்து களத்தில் சேர்த்தா
பணம் பண்ணிடுவார் பண்ணை
நமக்கு ஒதுங்க இலை திண்ணை
ரோட்டோரம் ஒதுங்கி வாழ்ந்தா
இயற்க்கை நம்மை கண்டிடுமா
வீசு காற்றும் கொட்டும் மழையும்
வேறு திசை திரும்பிடுமா
பாடுபட்டு உழைத்து
பத்து காசு மிஞ்சல
மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து
மாத்து துணி நமக்கில்ல
பட்டு துணி கட்ட எனக்கு அசை தான்
பஞ்சப்பட்ட நமக்கு பகட்டு எதுக்குங்க
கணவன் :
தென்னங்கீற்றை வெட்டி
கூர மேல வெய்து
மூங்கில் கம்பு நட்டு
களிமண் சேர்த்து குழைத்து
நாமும் வீடு கட்டிடலாம்
சுகமாய் அதில் வாழ்ந்திடலாம்
ஆத்தோர மேட்டுல
பசும்புல் முளைச்சிருக்கு
பசு மாட்டை மேய்ச்சி
பால் கறந்து வித்து
பக்குவமாய் பணம் சேர்த்து
பட்டுத் துணி வாங்கித்தரேன்
ஓடிவரும் ஓடையிலே
துள்ளிவரும் கெண்டையை
பிடித்து வந்து நானுந்தரேன்
கம்பங்களி காய்ச்சி
கெண்டை குழம்பு வச்சி
நிலாச் சோறு திண்ணிடலாம்
வாடி புள்ள பக்கம்
இதுதான் உண்மை சொர்க்கம்
No comments:
Post a Comment