Saturday, 24 December 2011

இது அவசர உலகம் ! - தமிழ் கவிதைகள்


அன்று கடைத்தெருவில் பார்த்து
கண்கள் பேசியதால் வந்த காதல்
கைப்பேசியால் தொடர்கின்றது
பரிசு பரிமாற்றமும் வார்த்தை பரிமாற்றமும்
இந்த காதலுக்கு மூலதனமானது !

இன்று பெற்றோர்கள் அனுமதி இன்றி
உற்றார்கள் வெகுமதி இன்றி
பதிவு திருமணத்தில் முடிகின்றது

இன்று நீதி மன்றம் தேடி நிற்கிறது
வாதப் பரிமாற்றத்திற்காக
விவாகரத்துக் கோரி !

No comments:

Post a Comment