Sunday, 25 December 2011

மருத்துவ மகத்துவம் 2100 - தமிழ் கவிதைகள்


மனித உதிரி பாகங்கள்
மருந்துக் கடைகளில் மலிந்திருக்கும்
தோலின் நிறத்தை மாற்ற
அழகு நிலையம் வேண்டாம்
கிலோக்கணக்கில் தோல்கள்
பல வண்ண நிறத்தில் கிடைக்கும்
அறுவை சிகிச்சை இனி அறவே இல்லை
உடல் உள் உறுப்புகள்
இயக்கத்தில் பழுது பட்டால்
சேமிப்பு கிடங்கிலிருந்து
நாமே பொறுத்த நவீன பயிற்சி
ஊனம் என்ற சொல்லே
அகராதியில் நீக்கம்
ஊனமுற்ற பாகம்
செயற்கை பாகம் ஆக்க
வீதி தோரும் கடை பெருக்கம்
திசுவிலிருந்து திசு பெருக்கம்
எலும்பிலிருந்து எலும்பு பெருக்கம்
உயிரியல் பொறியாளர்கள்
உடனுக்குடன் தந்திடுவார்
மாற்று உருப்புக்காய்
காத்திருக்கும் கவலை இல்லை

பல வகை ரத்தங்கள்
பவுடராக மாற்றி
பெட்டிகளில் அடைத்து
வீதி தோரும் விற்கும்
தீய நீரைச் சேர்த்து
செலுத்திடலாம் உடலில்
தான கேட்டு யாரும்
கானம் பாட வேண்டாம்

ஆயுட்காலம் குறையாமல்
அதையும் இன்சூர் செய்திடலாம்
என்று இனிக்கும் இளமை
பூமியில் இல்லை இனி முதுமை

பத்து மாதம் சுமந்து
பரிதவித்து நொந்து
பிள்ளை பேறு வேண்டாம்
ஆயிர கருக்கள் உருவாகி
இன்குபேட்டரில் உருமாறி
ஒரே நாளில் பிறந்து
உலக சாதனை படைத்திடும்

வேண்டிய அளவில்
வேண்டிய அழகில்
வேண்டிய திறனில்
வேண்டிய குழந்தை
வேண்டாமலே பெற்றிடலாம்

கடவுள் மனிதனை படைத்தானா
மனிதன் கடவுளை படைத்தானா
இந்த கேள்விக்கு விடை புதிரானது
இந்த புது யுக மருத்துவத்தால்

No comments:

Post a Comment