Saturday, 24 December 2011

என்னை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் - தமிழ் கவிதைகள்


என்னை வாழ்த்தும் அன்பு உள்ளங்களே
நீங்கள் எந்தன் அன்பின் பிம்பங்களே
தமிழ் தொன்மைபோல் பல்லாண்டு வாழ்ந்திட
நலம் கூர்ந்து என்னை வாழ்ந்துங்களே

வானில் விண்மீன்கள் பலகோடி காணலாம் - உம்
நினைவில் நீந்தும் வாழ்வு பலவழி போகலாம்
இருந்தும் நாம் மெழுகின் சுடர் போலவே
நாளும் ஒளி தருவோம் பிறர் வாழவே

மீண்டும் மீண்டும் ஜென்மம் உண்டென்றால் - நாம்
மீண்டும் இணைவோம் உடன் பிறப்பாகவே
தொடர்ந்து பல பௌர்ணமி நாமும் கண்டே
யுகங்கள் கடந்தே வாழ்ந்திடுவோம்

மலரின் வாசனை மாலை வரை - என்
உயிரின் நேசம் உள்ள காலம் வரை
மாறா ஓசை கடல் அலை போலவே
உணர்வால் கலந்தோம் என்றும் நீங்காமலே

No comments:

Post a Comment