Saturday, 24 December 2011

இவளும் கண்ணகியே ! - தமிழ் கவிதைகள்


வறுமையில் வாடும்
வாழ்க்கை ஓட்டம்
குடியில் தினமும்
கொண்டவன் ஆட்டம்
ஒரு வேலை உணவுக்கே
தினம் திண்டாட்டம்
இப்படியே போகும்
இவள் கால ஓட்டம்
பெற்ற பிள்ளைக்கோ
கல்வியில் நாட்டம்
இதை நிறைவேற்ற முடியாத
தாயின் வாட்டம்
தரித்திரம் இவள் வாழ்வில்
தலைவிரித்தாடுது
கட்டிய தாலியும்
அடகு கடைக்கு போனது
எஞ்சி இருப்பது
உடல் ஒட்டிய துணியே
ஏழ்மையுடன் போராடி
வாழ்கிறாள் தனியே
இருந்தும் இவளிடம்
இருப்பது துணிவே
இவளும் இந்த நூற்றாண்டின்
கற்புக் கண்ணகியே !

No comments:

Post a Comment